டிக்கெட் வாங்குவதில் தகராறு…அரசுப் பேருந்து நடத்துனரை அடித்துக்கொன்ற பயணி: போதை ஆசாமியால் விபரீதம்..!!

Author: Rajesh
14 May 2022, 9:13 am
Quick Share

சென்னை: சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்தை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் பகுதியில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, பேருந்தில் பயணித்த போதை ஆசாமி ஒருவருக்கும், நடத்துனர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது போதையில் பயணித்த பயணி நடத்துனரை ஒருமையில் திட்டியது மட்டுமில்லாமல் அவரை தாக்க முற்பட்டுள்ளார். சக பயணிகள் போதை ஆசாமியை தடுத்து நிறுத்தியும் தொடர்ந்து போதை ஆசாமி நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திடீர் என்று நடத்துனர் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தில் பயணித்த போதை ஆசாமி நடத்துனரை தாக்கியுள்ளார். போதை ஆசாமி நடத்துனரை தொடர்ந்து தாக்கியதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

உடனே நடத்துனர் மயக்கமடைந்த தொடர்ந்து அங்கு பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் உடனடியாக நடத்துனரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே நடத்துனர் உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுது காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த நடத்துனர் விழுப்புரம் பணிமனையில் பணிபுரிந்து வருவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் அவருடைய வயது 54 எனவும் தெரியவந்துள்ளது.

Views: - 393

0

0