பிரதமர் வருகையின் போது குளறுபடி.. ஒப்புக்கு சப்பான காரணங்களை கூறி திமுக தப்பிக்க பார்க்கிறது : அண்ணாமலை விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 10:19 pm
Anna - Updatenews360
Quick Share

பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடி பாதுகாப்பு மட்டுமே எஸ்பிஜி பிரிவிடம் உள்ளது. வெளியிடங்களில் உள்ள அனைத்து பாதுகாப்பும் மாநில அரசின் கையில் உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.
அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து டெல்லி மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு பாஜக எடுத்து சென்றுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை.
டெல்லி மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக வரவேண்டிய 32,000 கோடி ரூபாயை மாநில அரசு தடுத்து நிறுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மாயாஜாலத்தை கடந்த ஏழு வருடங்களாக டெல்லி மக்கள் பார்த்துள்ளனர். பிரச்சாரத்தில் காட்டும் ஆர்வத்தை டெல்லி வளர்ச்சி பணிகளில் கெஜ்ரிவால் காட்டவில்லை.

டெல்லியில் உள்ள மகளிருக்கு மட்டுமான சிறப்பு மருத்துவமனைக்கு செய்த செலவை விட கெஜ்ரிவால் சொந்த கட்சிக்காக விளம்பரம் செய்த செலவு அதிகம். திமுகவை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக செய்தி தொடர்பாளர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள் பாதுகாப்பு பொறுப்பு மட்டுமே எஸ்பிஜி பிரிவின் கையில் உள்ளது. வெளிப்புறத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பும் மாநில அரசின் கையில் தான் உள்ளது. இது குறித்து கவர்னரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையின் பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து திருப்தி இல்லை என மாநில அரசே அவர்களின் எஸ்பி-யிடம் கூறியுள்ளனர். தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.
அவர்கள் ஒப்புக்கு சப்பானாக எந்த காரணங்களை சொன்னாலும் தமிழக மக்கள் , திமுக கொடுக்கும் எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கோயம்புத்தூர் கார் வெடிப்பு விவகாரத்தில் முதலில் மாநில அரசு, எதுவுமே நடக்கவில்லை என கூறினார்கள். ஆனால் தற்போது என்.ஐ.ஏ வின் டிஜிபி தமிழகத்தில் ஆய்வு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. திமுக செய்தி தொடர்பாளர்களுக்கு எதையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது என்றார்.

Views: - 309

0

0