வாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி..! புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..!

28 February 2021, 3:23 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா காங்கிரசின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக விளாசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதன் தலைவரான நாராயணசாமியை சோனியா காந்தி குடும்பத்திற்கு ரூ 15,000 கோடி மத்திய நிதியில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, பெரும்பான்மையை இழந்து இந்த மாத தொடக்கத்தில் சரிந்த காங்கிரஸ் அரசாங்கம், புதுச்சேரியை மையமாகக் கொண்ட மத்திய திட்டங்கள் குறித்து தேவையற்ற அரசியலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தி குடும்பத்திற்கு சேவை செய்வதிலும், கொள்ளையடித்த பணத்தை வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தியதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது அவர் குற்றம் சாட்டினார்.

தனது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பாஜகவை குற்றம் சாட்டியதற்காக நாராயணசாமியை எதிர்த்து அமித் ஷா, காங்கிரசின் வாரிசு அரசியலால் அந்த கட்சி நாடு முழுவதும் சரிந்து வருவதால் தான் பல மூத்த தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறினார்.

மத்தியில் மீன்வள அமைச்சகம் இல்லை என்று தொடர்ந்து பொய்யாக கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்த அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பே இதை அமைத்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.

Views: - 30

0

0