ப. சிதம்பரம் போட்ட குண்டு…. திமுக – காங்கிரஸ் இடையே புகைச்சல் : தேர்தல் முடிவு வரை தாங்குமா…?

22 April 2021, 6:46 pm
stalin - p chidambaram - updatenews360
Quick Share

நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் சுயமரியாதையை இழந்துதான் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததை, அக்கட்சியின் மாநில தலைவர் கண்ணீர் விட்டு கதறியதன் மூலம் அனைவருக்கும் தெரிய வந்ததே. அதுமட்டுமில்லாமல், தொகுதி ஒதுக்கீட்டின் போது, கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. ஆனால், அதனை வழங்க திமுக மறுத்து விட்டது. பிறகு, அப்படி… இப்படி என நடந்த பல்வேறு உருட்டல்களுக்கு பின்னர் ஒரு வழியாக, அனைத்தும் இறுதி செய்யப்பட்டது.

stalin - ks alagiri - updatenews360

இதல், ஆச்சர்யம் என்னவென்றால், திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைய முக்கியக் காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடியை தொகுதியை திமுக கேட்டதுதான். ஆனால், அடம் பிடித்து, ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அந்தத் தொகுதியை வாங்கினர்.

காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் எச். ராஜா போட்டியிட்டார். இதனிடையே, திமுகவினர் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தின் போது உள்ளடி வேலை பார்த்தது தொடர்பான ஆடியோ ஒன்றை ப.சிதம்பரத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி கொடுத்துள்ளார்.

இதனைக் கண்டு கடுப்பான ப.சிதம்பரம், உடனடியாக இதனை முக ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

Stalin - Updatenews360

ப.சிதம்பரத்தின் இந்த செயல் காரைக்குடி திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். எங்கள் தலைவரிடமே தங்களை பற்றி போட்டுக் கொடுக்கிறீர்களா..? என்று தக்க நேரத்திற்காக காத்திருக்கிறார்களாம். அதோடு, சரி எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும், காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்திற்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் ப.சிதம்பரம், எனக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Views: - 159

0

0