தமிழக அரசியலில் வளர்ச்சியே இல்ல… வெறும் உணர்ச்சி, கவர்ச்சியும் தான் இருக்கு : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு..

Author: Babu Lakshmanan
14 October 2022, 12:28 pm
Quick Share

சிவகங்கை : தமிழக அரசியலில் வளர்ச்சி இல்லையே என்றும், வெறும் உணர்ச்சி மற்றும் கவர்ச்சியை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் எம்.பி. நிதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கார்த்தி சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பிரதமர் மோடி மதுரைக்கு வந்தால் 95% முடிந்துவிட்டதாக பாஜகவினர் கூறும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

congress mp karthi chidambaram - updatenews360

மத்திய அரசுப் பணி தேர்வில் இந்தி திணிப்பைக் கொண்டு வருவதைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தை மாற்றான் தாய் மனதுடன் அணுகுகின்றனர்.
வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும், நேரு குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவே வேண்டி இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செல்லும் நிலையில், அதற்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வகைகளிலும் பலன் அளிக்கும்.

தமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் விவாதங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவே இல்லை. மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. அதை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து எல்லாம் இங்கு விவாதம் நடைபெறுவது இல்லை. கல்வியில் என்ன மாதிரியான சீர்திருத்தங்களை ஏற்படுத்தலாம் என்ற விவாதம் இல்லை.

மாறாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் எந்த மதம் என்று விவாதித்து வருகின்றனர். இதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை தான். தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. இங்குள்ள அரசியல் வளர்ச்சிப்பாதையில் செல்வதாக எனக்குத் தெரியவில்லை. முதல்வர் அவரது உட்கட்சி விவகாரம் குறித்துப் பேசி இருந்தார்.

அது தொடர்பாக எதையும் சொல்ல விரும்பவில்லை திமுக என்பது முதல்வர் ஸ்டாலினை முழுமையாக ஏற்றுக் கொண்ட இயக்கம். அங்குப் பழுத்த அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அவர்களிடம் சென்று மேடையில் எப்படி பேச வேண்டும் என்று நான் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை, என்று அவர் கூறினார்.

Views: - 496

0

0