இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல் காந்தி : உத்தரபிரதேசத்தில் மேலும் பதற்றம்…!

Author: Babu
3 October 2020, 11:05 am
Rahul_Gandhi_UpdateNews360 (2)
Quick Share

கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், மீண்டும் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த 19 வயதுடைய தலீத் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கழுத்து எலும்பை உடைத்து, நாக்கையும் அறுத்திருப்பதாக வெளியான தகவலும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்தது.

இந்த சூழலில், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார், இதனால், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Views: - 36

0

0