வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு…டிராக்டரில் பேரணி சென்ற ராகுல்..! தடுத்து நிறுத்திய போலீசார்!!

Author: Babu
6 October 2020, 5:45 pm
Congress rahul tractor - updatenews360
Quick Share

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை நடத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முடிவு செய்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள பத்னி காலன் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணியை தொடங்கினார். இறுதி நாளான இன்று நுர்புரில் இருந்து பாட்டியாலா வரை ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டிக் கொண்டு, டிராக்டரில் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகருடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார். அப்போது, ஹரியானா மாநில எல்லையில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது, இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றும், 5000 மணி வரை ஆனாலும் மகிழ்ச்சியாக காத்திருப்பேன் என அவர் கூறினார்.

Views: - 72

0

0