காங்., எம்.பி. வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்

28 August 2020, 3:30 pm
Vasanthakumar - Updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., வசந்த்குமாரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்த்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமும், பின்னடைவும் ஏற்பட்டு வருவதால், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வசந்தகுமாருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 30

0

0