தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கை இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார். வயநாடு தொகுதியில் இருந்து பாசிசத்தை ஒழிக்க தீப்பொறி கிளம்பி இருக்கிறது.
மேலும் படிக்க: வாக்குச் சீட்டு முறை வழக்கில் திடீர் திருப்பம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தோல்வி பயத்தில் அச்சத்தில் மோடி பிரதமர், தலைவர் என்ற தகுதியை மீறி, தேசிய கட்சி என்பதை மீறி, மிகவும் கீழ்த்தரமான மக்கள் ஏற்று கொள்ளாத வகையில், பாசிசவாதியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மகாத்மா காந்தி தேசத்திற்கு விடுதலை பெற்று தரும் போது, இந்த நாட்டின் மண்ணில் ஒருவன் பிறக்கிறானோ, அவனுக்கு சம உரிமை இருக்கிறது. எல்லாருக்குமான உரிமை. எல்லாரும் நாட்டின் பிரஜை என்றார்.
ஆனால் மோடி மக்களை பிரித்தாளும் கொள்கையில் இறங்கி இருக்கிறார். நான் இந்து. மோடி பேச்சை ரசிக்காமல் வெறுக்கிறோம். பாசிச சக்திகளை புறந்தள்ள வேண்டும் என மக்கள் முடிவு செய்து உள்ளனர். தோல்வி பயம், தோல்வி அச்சம். தேர்தலில் மிகப்பெரிய படுதோல்வி அடைய போகிறார்கள். 100 இடங்களுக்கு மேல் கூட பா.ஜ.க. பெறாது என வட நாடு பத்திரிகையாளர்கள் பேசுகின்றன. தோல்வி பயத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் மோடி இப்படிப்பட்ட நாகரிகமுற்ற பேச்சை பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.
தோல்வி அச்சத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகின்றனர். தோல்வி அச்சத்தில் ஜெயசங்கர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டாரா..? நிர்மலா சீதாராமன் உள்பட எத்தனை அமைச்சர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். தோல்வி பயத்தில் மக்களை சந்திக்காமல் மாநிலங்களவைக்கு சென்றார்களா…?
இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் மோடி அமலாக்க துறை, சிபிஐ, வருமான வரி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறார். இதனால் மோடி மீது எந்தவித நடவடிக்கையும் இருக்காது. திருநெல்வேலி வேட்பாளருக்கு செல்லக்கூடிய 4 கோடி ரூபாய் பிடிபட்டது. இதுவரை அமலாக்கத்துறை விழிக்காமல் கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டு இருக்கா? வருமான வரி, சிபிஐ என்ன செய்கிறது. இவை தான் மோடியின் ஆட்சி. இதை தான் பாசிசம் என்பார்கள். எல்லாருக்குமான நடவடிக்கை, ஆட்சியாக இருக்க வேண்டும். எல்லாருக்குமான அதிகாரிகளாக இருக்க வேண்டும். ஆனால் பாசிச ஆட்சியில் இது எல்லாம் நடக்காது.
ஜனநாயக ரீதியாக எல்லா அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். காலையில் சோதனை என்ற பெயரில் ரெய்டு மாலையில் பா.ஜ.க. கணக்கிற்கு பணம் சென்று விடும். இது தான் தேர்தல் நன்கொடை பத்திரம். இது பற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு பின் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.