நாளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலோசனை கூட்டம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

29 November 2020, 8:31 am
rajini mandram - updatenews360
Quick Share

சென்னை: ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வரும் 30ம் தேதி, திங்கள்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்பதையும், தமிழக அரசு பரிந்துரைத்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவோம் என்பதையும் உறுதிப்படுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் ரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினி ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளனர்.

Views: - 16

0

0