தெலங்கானாவில் தொடரும் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்….பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.!!

Author: Aarthi Sivakumar
23 July 2021, 3:47 pm
telangana rain - updatenews360
Quick Share

தெலங்கானா: தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே சாலைகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சிரிசில்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வெள்ள நீர் சூழந்துள்ளதால் நீரில் மிதந்தபடி வாகனங்கள் செல்கின்றன. மேலும் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதனிடையே குமரம் பீம், ஜக்தியால், வாரங்கல் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 170

0

0