வாழ்த்து தெரிவித்து வம்பில் சிக்கிய கோவை மகேந்திரன் : வறுத்தெடுக்கும் திமுக உபிஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2021, 9:30 pm
DMK Mahendran - Updatenews360
Quick Share

கோவை மகேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும், இன்னும் சிலருக்கு ஆனந்தமாகவும் இருக்கும். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவர் என்னும் மிகப்பெரிய பொறுப்பை வகித்து வந்தவர். கமல்ஹாசனின் வலது கரமாகவும் திகழ்ந்தார்.

Former MNM vice-president Mahendran joins DMK - The Week

டாக்டர் மகேந்திரனுக்கு, விவசாயி, தொழிலதிபர், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் என்று பல முகங்கள் உண்டு. கோவை தெற்குத் தொகுதியில் கமல்ஹாசனை வெற்றிபெற வைப்பதற்காக தீவிர தேர்தல் பணியும் ஆற்றியிருக்கிறார்.

மகேந்திரனின் ம.நீ.ம பயணம்

அவரும் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து
45 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளார். ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் படுதோல்வி கண்ட பின்பு கமல்ஹாசனை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

Betrayer, says Kamal Haasan as party VP quits - Rediff.com India News

தேர்தல் முடிவுக்கு பின்பு கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியபோது, கமல் அவரை நீக்குவதற்கு முன்பாகவே, துணைத்தலைவர் பதவியில் இருந்து மகேந்திரன் ராஜினாமா செய்து அதிரடியும், பரபரப்பும் காட்டினார்.

தி.மு.க.வில் ஐக்கியம்

அவர் உடனடியாக திமுகவில் சேருவார் என்று கூறப்பட்டது. ஆனாலும் 2 மாதங்களுக்குப் பிறகே அண்ணா அறிவாலயத்தின் கதவுகள் அவருக்கு திறக்கப்பட்டன. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அவரை மிகவும் புகழ்ந்து பேசினார்.

Former MNM vice-president R Mahendran joins DMK | Cities News,The Indian  Express

அதனால், அவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இணைச் செயலாளர் பதவிதான் கொடுக்கப்பட்டது. எனினும் கோவை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும்போது மேயர் வேட்பாளராக டாக்டர் மகேந்திரன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் திமுக வட்டாரத்தில் உள்ளது.

சிக்கலை வரவழைத்த வாழ்த்து

இந்த நிலையில்தான் அவர் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அது அவரை வம்பில் சிக்க வைத்துள்ளது. அவர், வெளியிட்ட அந்தச் செய்தியில், “அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பும், மகிழ்ச்சியின் பெருகிட இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வாழ்த்தி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Image

அந்த வாழ்த்துச் செய்தியின் மேற்பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி மூவரின் படங்களுடன் கீழே பாலகன் கிருஷ்ணர், பூமிப் பந்தில் மயில்தோகை கீற்று ஒன்றின் அருகே
கையில் புல்லாங்குழலுடன் நடந்து செல்வது போன்ற அழகான படமும் இணைக்கப்பட்டிருந்தது.

மகேந்திரனை வறுத்தெடுத்த திமுகவினர்

இதுதான் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் கூறினார். அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். கருணாநிதி ஒருபோதும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்தது இல்லை. அவ்வாறு இருக்கும்போது டாக்டர் மகேந்திரன் மட்டும் எப்படி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்” என்று திமுகவில் உள்ள திராவிடர் கழக ஆதரவு சிந்தனையாளர்கள், டாக்டர் மகேந்திரனை சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Dr Mahendran R (@drmahendran_r) | Twitter

“மகேந்திரன் இப்போ இருப்பது திமுகவில். மக்கள் நீதி மய்யத்தில் அல்ல. அவர் எதற்காக கிருஷ்ண
ஜெயந்தி வாழ்த்து கூறுகிறார்? பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைகிறார்கள். இப்படி வருவோர், போவோர் எல்லோரையும் அவர்களது பின்னணி தெரியாமல் கட்சியில் சேர்த்தால் திமுகவின் கொள்கை நீர்த்துப் போய் விடும்” என்று திமுகவின் சீனியர் தலைவர்கள் மனம் குமுறுகிறார்களாம்.

கருணாநிதி மீது தீவிர பற்றுக்கொண்ட திமுக உடன்பிறப்புகளும் தங்களுடைய கடும் எதிர்ப்பை
பதிவு செய்து வருகின்றனர். இது திமுக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் உருவாக்கி உள்ளது.

மகேந்திரன் ஆதரவாளர்கள் கொதிப்பு

டாக்டர் மகேந்திரன் தரப்பு ஆதரவாளர்கள் கூறும்போது, “கிருஷ்ணஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்ததில் எந்த தவறும் இல்லை. திமுகவில் கடவுள் நம்பிக்கை கொண்ட, தினமும் கோவிலுக்கு சொல்லும் தொண்டர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை கோவிலுக்கு செல்லாதே என்று கூற முடியுமா? அப்படி நிர்ப்பந்தம் செய்வதை விரும்பும் சிலர்தான், இதை பூதாகர பிரச்சினை ஆக்குகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா எல்லா கோவில்களுக்கும் செல்கிறார். பூஜைகளிலும் பங்கேற்கிறார்.

Kamal Haasan's close aide Dr R Mahendran likely to join DMK today - India  News

திமுகவில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைகளை வெகுவிமர்சையாக குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றனர். அதற்காகத்தான் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை டாக்டர் மகேந்திரன் தெரிவித்தார். அதனால் ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்க முயற்சிக்கிறார்கள். மகேந்திரன் திமுகவில் இணைந்ததையும் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டதையும் ஒரு சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் குட்டையை குழப்புகிறார்கள்” என்று உண்மையை உடைத்தனர்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அரசியல் விமர்சகர்கள் இது பற்றி கூறும்போது,”திமுகவில் இருந்து கொண்டு டாக்டர் மகேந்திரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு அண்மையில் 58 பேரை அர்ச்சகர்களாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு நியமித்தது.

இந்த அர்ச்சகர்களில் சிலர், கும்பகோணத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கவும் செய்தனர். கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி சிலைகளுக்கு பூஜை செய்வதை ஏற்றுக் கொள்வது சரி என்றால் டாக்டர் மகேந்திரன் செய்ததும் சரியானது என்றே சொல்லவேண்டும்.
ஏனென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கோவிலில் என்ன வேலை? என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.

அதேபோல் டாக்டர் மகேந்திரன் திமுகவில் சேர்ந்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்துவது போலவும் அதை அண்ணாவும், பெரியாரும் அருகிலிருந்து பார்த்து ரசிப்பதை போன்றதொரு காட்சியையும் திமுக கொடியின் பின்னணியுடன் வைத்து இருக்கிறார். இப்படி ஒரு புகைப்படம் எந்தக் காலத்தில் எடுக்கப்பட்டது? என்ற கேள்வியை இப்போது கொந்தளிக்கும் திமுக உடன்பிறப்புகளும், சீனியர் தலைவர்களும் என்றாவது எழுப்பினார்களா, என்ன? அவர் தனது கற்பனையில் தோன்றிய ஒரு காட்சியை புகைப்படமாக மாற்றியிருக்கிறார். அவ்வளவுதான். அதை கட்சியில் உள்ள அனைவரும் ரசிக்கத்தானே செய்கிறார்கள்?

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து விஷயத்தை பொறுத்தவரை திமுகவின் மூத்த தலைவர்கள் யாரும் வெளிப்படையாக மகேந்திரனை விமர்சிக்காத நிலையில் இடையில் இருப்போர் ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறார்கள்? துள்ளுகிறார்கள்? என்பது புரியவில்லை. சிலரைப்போல் இரட்டை வேடம் போடாமல் தனது உண்மையான நிலைப்பாட்டை மகேந்திரன் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 282

0

0