கோயிலுக்குள் செருப்பு காலோடு வந்த திமுகவினர்: முகம் சுழித்துச் சென்ற பக்தர்கள்..!!
Author: Rajesh16 மே 2022, 9:04 காலை
வேலூர்: செல்லியம்மன் கோவில் திருவிழாவில் கோவிலுக்குள் திமுகவினர் செருப்பு அணிந்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா 15-ம் தேதி இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து விழாவினை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், திமுக இந்துவிரோத கட்சி, எதிரி கட்சி என்றெல்லாம் சொல்கிறார்கள், இந்து சமய அறநிலையத்துறையின் பதவியேற்பு விழாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் பங்கேற்றுள்ளாரே இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
மேலும் வேலூர் அறங்காவலர் குழு தமிழகத்திலேயே சிறந்த அறநிலையத்துறை அறங்காவலர் குழு என்ற பெயர் எடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் சேகர் பாபு பேசினார்.
இந்நிகழ்ச்சி செல்லியம்மன் கோயில் உள்ளே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த திமுக கட்சியினர் பலர் காலணிகளை அணிந்தவாரே கோயிலுக்குள் வந்திருந்தனர். இச்செயல் அங்கிருந்த பக்தர்களிடத்தில் முக சுழிப்பை ஏற்படுத்தியது.
கோயில் உள்ளே செருப்பு போட்டு வருவதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா என்று கூறி சில வீடியோவை பரப்பி வருகிறனர் பக்தர்கள்.
மேலும் விழா துவக்கத்தில் குத்து விளக்கு ஏற்றாதது, முறையாக திட்டமிடாதது, தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு என இந்நிகழ்ச்சி சர்க்குள்ளாகியுள்ளது.
0
0