கமல் பார்ட்டியில் போதைப்பொருள்… நடிகர் தனுஷ் செய்த ஃபிராடு வேலை : பாடகி சுசித்ரா பகீர்..!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 7:37 pm

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் பார்ட்டிகளில் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக பிரபல பாடகி சுசித்ரா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு சர்வ சாதாரணம் என கூறியிருக்கிறார் பாடகி சுசித்ரா. மேலும் தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் கொக்கைன் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

சுசி லீக்ஸ் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாடகி சுசித்ரா தற்போது அளித்திருக்கும் பேட்டி பற்றி தான் சினிமா ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சுசி லீக்ஸ், தனுஷ், தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பேசியிருக்கிறார். இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் சாதாரணமானது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மக்களே குட் நியூஸ்… தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கப் போகுதாம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

அந்த பேட்டியில் சுசித்ரா கூறியதாவது, கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினால் நாலு லைன் கொக்கைன் அடிச்சுட்டு வரானு எல்லோருக்கும் தெரியும். கமல் ஹாசன் பார்ட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொண்டு வருவாங்க கொக்கைன். அதை வேண்டாம்னு சொன்னதுக்கு என்ன வச்சு செய்றாங்களா. கோலிவுட்டில் போதை கலாச்சாரம் சகஜமாக இருக்கிறது. அதை எதிர்த்து போராட முயன்று கொண்டிருக்கிறார் சரத்குமார். போதை கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளார் ராதாரவி, எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் கலாச்சாரத் தலைதூக்கியுள்ள நிலையில், பிரபல பாடகி ஒருவர், கமல்ஹாசனின் பார்ட்டியில் சகஜமாக போதைப் பொருட்கள் புழங்குவதாகக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சுசி லீக்ஸ் டைமில் தான்ரொம்ப டார்ச்சர் அனுபவித்து இருப்பதாகவும், நடிகர் தனுஷ், கார்த்திக் குமார் செய்த பிராடு வேலையை சாமிகிட்ட விட்டுட்டேன் என்று கூறிய அவர், அவரு எனக்காக பழி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், அதனாலேயே தனுஷ் குடும்பம் சின்னாபின்னமாகிடுச்சு, இன்னும் நிறைய மோசமானது எல்லாம் நடக்க வேண்டும் என காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனுஷ் தனக்கு மூன்றாவது எதிரி தான் என்றும், இருந்தாலும் விவாகரத்து விஷயத்தில் தனுஷ் பக்கம் தான் மக்களின் அனுதாபம் உள்ளதாகவும், ஏனென்றால் தனுஷ் நல்ல அப்பா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மோசமான அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணவர் ஒரு GAY என்று மருத்துவரே கூறியதாக குறிப்பிட்ட சுசித்ரா, தனது கணவர் கார்த்திக் குமாருக்கும், தனுஷுக்கும் யாரடி நீ மோகினி படத்தின் மூலம் நன்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், ஒரு அறையில் இருவரும் என்ன செய்தார்களோ..? என்று ரசிகர்களையே ஏடாகூடமாக சிந்திக்க வைக்கும் அளவுக்கு பேசியுள்ளார்.

சுசி லீக்ஸை தாண்டியும் தற்போது சுசித்ரா பேசிய விவகாரங்கள் தான் தமிழகத்தை உலுக்கி வருகிறது.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 436

    0

    0