கொரோனா பற்றி நல்ல விஷயம் சொன்ன சுகாதாரத்துறை..! என்னவாக இருக்கும்…?

1 July 2020, 10:17 am
Corona District Wise - Updatenews360
Quick Share

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளில் ஒன்று இந்தியா.

ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக, கொரோனா இறப்பு எண்ணிக்கை நமது நாட்டில் குறைவாகவே உள்ளது. கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை விகிதமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந் நிலையில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் பெற்றவர்கள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,099 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதாவது இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59.07% (3,34,821) ஆக அதிகரித்து இருப்பதாக கூறி உள்ளது.