கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு : தமிழக அரசு அறிவிப்பு!!

6 August 2020, 6:13 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவுக்கு எதிரான பணியின் போது, நோய் தொற்று ஏற்பட்டு பலியான முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.26 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று தணியத் தொடங்கியுள்ளது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா பரவலை தடுக்க போராடும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த முன்கள வீரர்கள் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சத்தை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு பணிகளின் போது நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு 28 அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. தலா 25 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 கோடியும், சென்னை மாவட்டத்திற்கு ரூ.1 கோடியும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.75 லட்சமும், காஞ்சிபுரம், விருதுநகர், ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், திருச்சி, சேலம், தஞ்சை மற்றும் கடலூ மாவட்டத்திற்கு தலா ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 8

0

0