தாண்டவமாடும் கொரோனா : முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு… மறுதேதி பின்னர் அறிவிப்பு..!!

15 April 2021, 7:52 pm
NEET_2021_UpdateNews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் ஏப்.,18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனாவின் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மருத்துவ மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும், முதுநிலை நீட் தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Views: - 29

0

0