24 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு : தமிழகத்தை உலுக்கும் நோய்த் தொற்று..!!

Author: kavin kumar
16 January 2022, 7:40 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,39,923 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 39 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 304 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 22 பேர் உயிரிழந்துள்ளார். 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,423 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 60ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8987 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2701 பேருக்கும், மூன்றாவது இடத்தில் கோவை 1866 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 264

0

0