தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி
24 September 2020, 12:44 amசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக்தில் கொரோனாவால் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ என பலருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். திமுகவில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொற்று உறுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.