இந்தியாவுக்கு வந்தாச்சு ஒமிக்ரான் XE திரிபு…கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை?: மும்பையில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி..!!

Author: Rajesh
6 April 2022, 6:35 pm
Quick Share

கொரோனா தொற்றின் அடுத்த திரிபான ‘ஒமைக்ரான் எக்ஸ்.இ.’ திரிபு இந்தியாவில் முதன்முதலாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பி.எம்.சி. (மும்பை) கமிஷ்னர் இக்பால் சிங் சஹால் கூறியுள்ளார். சுமார் 376 பேருக்கு சோதனை செய்யப்பட்டத்தில், ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து இக்பால் சிங் தெரிவித்துள்ள தகவலில், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 230 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் 228 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என தெரிகின்றது. மற்றவர்களில் கப்பா திரிபு ஒருவருக்கும், எக்ஸ்.இ. திரிபு ஒருவருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புது திரிபு உறுதியானவர்களுக்கு தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என்றுள்ளார். இந்த எக்ஸ்.இ. திரிபு, முதன்வகை ஒமைக்ரானை விடவும் 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 830

0

0