நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…!!!

5 May 2021, 6:34 pm
tasmac-leave-udpatenews360
Quick Share

சென்னை : கொரோனா நாளை முதல் நண்பகல் முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால், டாஸ்மாக் கடை திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நண்பகல் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து, பிறவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா..? இல்லையா..? என்ற குழப்பம் குடிமகன்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில், நாளையில் இருந்து நண்பகல் முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால், டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 180

1

0