விமானம் மூலம் சென்றடைந்த 20 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் : பிரதமர் மோடிக்கு பிரேசில் பிரதமர் நன்றி..!!

23 January 2021, 11:08 am
Corona vaccine - updatenews360
Quick Share

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டுக்கு 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு பிரேசில் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுக்குள் வந்த நிலையில், கோவேக்ஷின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகளை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளையும், அந்தந்த நிறுவனங்கள் முழுவீச்சில் தயாரித்து வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு, மாநிலங்களுக்கு டோஸ்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும், பயன்பாட்டிற்கு அதிகம் டோஸ்கள் தயாரிக்கப்படுவதால், வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, முதற்கட்டமாக, பிரேசில் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசியின் டோஸ்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசி டோஸ்கள் சென்றடைந்தன.

அதனைப் பெற்றுக் கொண்ட பிரேசில் நாட்டு பிரதமர் ஜெய்ர் போல்சனரோ பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை கொண்டிருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்று பெரிமைக்குரியது எனவும் பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

Views: - 7

0

0