ஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

16 April 2021, 1:58 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சராசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதுவரையில் 544 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து தொட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2,500க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மறுபுறத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அவசர வழக்குகள், முக்கிய முறையீடுகளை தவிர்த்து, பிற வழக்குகள் அனைத்தும் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவே விசாரிக்கப்பபடும் என அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பைவு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதே நடைமுறையை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கடைபிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகள், பார் கவுன்சிலின் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.

Views: - 29

0

0