உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை : பிரிட்டனை பின்னுக்குத் தள்ளியது இந்தியா..!
13 August 2020, 3:43 pmஉலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கையில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவிற்கு இதுவரையில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7.5 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகளில் அதிகம் தென்பட்டு வந்த பாதிப்பு, தற்போது வளரும் நாடுகளையும் ஒருவழி செய்து வருகிறது.
உதாரணமாக, இந்தியாவில் கிடுகிடுவென கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும பலியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பலி அதிகமான நாடுகள் பட்டியலில் மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த நிலையில், 4வது இடத்தில் இருந்து பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, தற்போது இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. அதிக மக்கள் தொகையில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 942 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை காட்டிலும் நாளொன்று சராசரி கொரோனா பாதிப்பும் இந்தியாவில் அதிகமாகவே காணப்படுகிறது.
தற்போது, மொத்த கொரோனா பாதிப்பில் 24 லட்சத்தை எட்டியுள்ள இந்தியா, பாதிப்புகள் நாடுகள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.