கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை!

10 August 2020, 2:01 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றுக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஆனால், முன்பை விட பலி எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறு வழிபாட்டு தலங்கள், யோகா மையம், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனையின் போது, கொரோனா நிலவரம் பற்றி பிரதமர் மோடி கேட்டறிய உள்ளார்.

Views: - 9

0

0