கொரோனா விதிகளை மீறினால்.. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்…!!!

10 April 2021, 4:47 pm
West bengal - TMC updatenews360
Quick Share

கொல்கத்தா : கொரோனா விதிகளை கடைபிடிக்கத் தவறினால், பொதுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தமாதம் 27ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், கடந்த 1ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவும், 6ம் தேதி 3வது கட்ட வாக்குப்பதிவும் நடந்தன.

இந்த நிலையில், 44 தொகுதிகளுக்கான 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இதனிடையே, 5வது கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருவதாக அடுத்தடுத்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறினால் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 19

0

0