கேரளாவில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு : பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்..!!

6 May 2021, 11:55 am
curfew 01 updatenews 360
Quick Share

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் வேகமெடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- கேரளாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்., என தெரிவித்தார்.

ஏற்கனவே, கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 118

0

0