மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தல் : மூத்த உறுப்பினர்கள் புறக்கணித்தால் முடிவு மாற வாய்ப்பு..?

10 September 2020, 6:27 pm
Parliment 01 updatenews360
Quick Share

சென்னை: கொரோனா சூழலில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத நிலையில், தேர்தல் முடிவில் அது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இருந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், அடுத்த வாரம் கூடவுள்ளன. கூட்டத்தொடரின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங், தற்போது மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளதாலும், பீகார் சட்டசபைத் தேர்தல் வரப்போவதாலும், அவரையே மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக பாஜக நிறுத்தயுள்ளது. ஹரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு போட்டியாக, பிற கட்சிகளுடன் ஆலோசித்து, பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

stalin-rahul- updatenews360

கூட்டணிக் கட்சியான திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்முடிவை திமுக ஏற்றுக்கொண்டதாகவும். மூத்த தலைவர் திருச்சி சிவாவை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மாநிலங்களவையில் தற்போது மொத்த உறுப்பினர்கள் 245. அதில் 123 உறுப்பினர்களின் ஆதரவு வெற்றி பெறுவதற்குத் தேவை. பாஜகவுக்கும் அதை ஆதரிக்கக் கூடிய கட்சிகளுக்கும் 140 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல்லால் பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வருவதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ்குமாரும் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Parliment 02 updatenews360

சிவசேனா கட்சி கலந்துகொள்வதை உறுப்பினர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றி முடிவு அறிவிக்கவில்லை. கொரோனாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட உள்ளன. மூன்று நாட்களுக்கு முன்பே உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்தக் கட்சியில் இருந்து புறக்கணிப்பு அதிகமாக இருக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் என்று வரும்போது கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளது. உறுப்பினர்களின் வருகையைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

Views: - 0

0

0