கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ; மொத்தம் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

26 March 2020, 6:28 pm
corona 02 updatenews360
Quick Share

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமெடுத்துள்ள கொரோனா வைரஸ் இதுவரை 13 பேரை கொன்றுள்ளது. மேலும், 650-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனாவின் சமூக பரவலை முறியடிக்கும் நோக்கில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா முதன்முறையாக கேரளாவில்தான் கால்பதித்தது. பின்னர், அடுத்தடுத்து, கர்நாடகா, தமிழகத்திற்கும் பரவியது. இதையடுத்து, இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேரிடராக அறிவித்தார்.

தேசிய அளவில் இந்த கொரோனா வைரஸானது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply