கொரோனா தாக்கம் : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Author: Babu Lakshmanan
20 March 2021, 8:39 pm
Quick Share

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம் காட்டுவதால் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு தென்பட்டது.

எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 181

0

0