‘கொரோனா விதிகளை மீறினால் இனி அவ்வளவுதான்’… வருகிறது புதிய சட்டம்!!

25 August 2020, 5:51 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : கொரோனா வைரஸ் விதிகளை மீறுபவர்களை தண்டிக்கும் விதகமாக, புதிய சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு 6 ஆயிரத்திற்கு மிகாமல் இருந்து வருகிறது. தற்போது வரை 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கடைகள், உணவகங்கள் என அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் யாரும் கடைபிடிப்பதில்லை எனப் புகார் எழுந்து வருகிறது. இதன் சான்றாக, முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத்தொகையின் வசூலே ஆகும்.

இந்த நிலையில், கொரோனா விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இதற்கென புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. புதிய சட்டத்தில் இடம்பெற வேண்டிய விதிகள் அடங்கிய கோப்புகளை சட்டத்துறையிடம் வழங்குவதற்கான பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. ஒப்படைக்கப்பட்டதும் புதிய சட்டம் அமலுக்கு வரும்.

Views: - 34

0

0