கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு

16 May 2021, 8:09 pm
vijayabaskar - updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள்‌ கூட்டம்‌ 13.05.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது. அக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்‌ ஒன்றாக பின்வரும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

“நோய்த்தொற்றுப்‌ பரவலை கட்டுப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச்‌ சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம்‌ என தீர்மானிக்கப்பட்டது”

  1. மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின்‌ அடிப்படையில்‌, அனைத்து சட்டமன்ற கட்சிகளின்‌ தலைவர்களுடன்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து தலைமையில்‌ பின்வரும்‌ சட்டமன்ற உறுப்பினர்களைக்‌ கொண்ட ஆலோசனைக்‌ குழு அமைக்கப்படுகிறது.

மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம்‌ கருதி நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகள்‌ பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்‌. இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளார் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 171

0

0