கொரோனா பல வகைகளில் உருமாற வாய்ப்பு… இந்தியாவிற்கு உதவ வேண்டும் : அமெரிக்க அதிபருக்கு 57 எம்பிக்கள் கடிதம்..!!

14 May 2021, 10:36 am
Joe_Biden_UpdateNews360
Quick Share

கொரோனாவால் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜே பிடனுக்கு 57 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கொரோனா தொற்றின் 2வது அலையில் சிக்கி இந்தியா சின்னாபின்னமாகி வருகிறது. நாளொன்றுக்கு 3.50 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளும், 4 ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி எம்பி பிராட் ஷர்மன் தலைமையில் 57 எம்பிக்கள், அதிபர் ஜோ பிடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இந்தத் தொற்று மேலும் பல வகைகளில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உருமாறும் வைரஸினால் அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உலகின் எந்த மூலையில் கொரோனா தொற்று இருந்தாலும, அங்கு அமெரிக்கா தனது பங்கை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்கள், இந்தியாவிற்கு தேவையான ஆக்சிஜன், ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை இந்தியாவிற்கு வழங்க அதிபர் ஜோபிடனிடம் அமெரிக்க எம்பிக்கள் கேட்டுக் கொண்டனர்.

Views: - 110

1

0