உலகளவில் கைகழுவுவதில் மோசமான நாடுகள் பட்டியல் வெளியீடு : இந்தியாவின் நிலை தெரியுமா..?

27 March 2020, 11:30 am
hand wash - updatenews360
Quick Share

உலகளவில் கைகழுவும் பழக்கத்தில் மோசமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் உருவாகிய கெரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 5.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருப்பினும், அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவேளை உள்ளிட்டவற்றை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலகளவில் கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தை அதிகம் கொண்டவர்களின் நாடுகள் பற்றிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சவுதி அரேபிய முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த நாட்டில் வெறும் 3 சதவீதம் மக்கள் மட்டுமே கைகளை கழுவும் பழக்கம் இல்லாதவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலைக்கு தூய்மையாக இருப்பவர்களின் பட்டியல் நமக்கு தேவையில்லை.

சரி, கை கழுவும் பழக்கம் இல்லாதவர்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலை நாம் பார்க்கலாம். இதில், 50 சதவீதம் மக்கள் கழிவறைக்கு சென்று விட்டு கைகழுவும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. கொரோனாவின் பிறப்பிடமாக சீனாவில் 77 சதவீத மக்கள் கைகளையே கழுவுவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும்.

இதைத் தொடர்ந்து, ஜப்பான், தென்கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 16-வது இடத்திலும், ஆப்கன் 25-வது இடத்திலும், வங்கதேசம் 26-வது இடத்திலும் உள்ளது.

இனியாவது, இந்தியர்களாகிய நாம் கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு கொரோனாவில் இருந்து தப்பிப்போம்…!