கோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு

16 May 2021, 6:38 pm
coviShield -Updatenews360
Quick Share

டெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயுக்கான தடுப்பு மருந்தாக கோவேக்சின் மறறும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டிற்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் செலுத்திய பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு 2வது டோஸை போட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது.

இதனிடையே, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்களாக அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக்கொள்ள 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய நேஷனல் கெல்த் மிஷன் அமைப்பின் சார்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 103

0

0