தேர்விபத்தில் 11 பேர் பலி.. நிவாரணம் போதாது… கூடுதல் தொகையும், அரசு வேலையும் வழங்குக : தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
28 April 2022, 1:06 pm
Quick Share

தஞ்சை : தஞ்சாவூரில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை இதுபோன்ற திருவிழாக்களில் மக்கள் அதிகமாக கூடுகிற விழாக்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்கான முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இருக்காது என்றும், அவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு தேவையற்றது, இதில் அரசியலை புகுத்த கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 604

0

0