இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்: இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகம்

20 November 2020, 11:35 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவரது தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.

நுரையீரல் நோய் காரணமாக, முகமது சிராஜின் தந்தை ஹைதராபாத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவிலுள்ள சிராஜ், குவாரன்டைன் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாக இந்தியா கிளம்ப முடியாத நிலையில் உள்ளதால் தனது தந்தைக்கு தன்னால் இறுதி சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. எனது வாழ்வின் மிகப்பெரிய உறுதுணையை நான் இழந்து விட்டேன். நான் நாட்டிற்காக ஆடுவதை காணுவதே என் தந்தையின் கனவாக இருந்தது. ஆட்டோ ஒட்டி எனது கனவை நோக்கி என்னை எனது தந்தை வழிநடத்தினார். அவரது ஆசையை நிறைவேற்றி அவரது முகத்தில் நான் மகிழ்ச்சியை மலரச் செய்தேன்’ என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0