நாளை வெளியாகுமா முக்கிய அறிவிப்பு ..?? ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாளை பிரதமர் உரை…

29 August 2020, 11:22 pm
Quick Share

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார்.

அகில இந்திய வானொலி மூலம் பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி வழக்கம் போல நாளை காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்தையும் கடந்துள்ளது. குறிப்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் நாளைய ’மன் கி பாத்’ நிகழ்ச்சி சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளைய ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்களை பிரதமர் மோடி விவரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 24

0

0