செப் 20-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

26 August 2020, 11:20 pm
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஐந்தாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தாராளமாக தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையைப்போல், மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் அதற்கு பிறகும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில் ஜூன் மாதத்தில் இருந்து அன்லாக் என்ற முறையில் ஒவ்வொரு கட்டமாக தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றால் பெரும்பாலான மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதியில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அன்லாக் 4 குறித்து மத்திய அரசு இன்னும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை மேற்கு வங்காளத்தில் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியருப்பதாவது:- மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்றுக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இம்மாதத்துடன் ( ஆக.,31) முடிவடைகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் செப்.,20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து கோல்கட்டாவிற்கு வரும் விமானங்களுக்கு ஆக.,31 வரை மாநில அரசு தடை விதித்திருந்தது. மேலும் செப்டம்பர் 7, 11, 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.