மீண்டும் முதல் இடத்தை பிடித்தது டெல்லி அணி : 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது

14 October 2020, 11:29 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

துபாய் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு, முன்னணி வீரர்கள் இந்த முறையும் தவான் தனது பங்களிப்பை கொடுத்தார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்களை குவித்தார். இருவரும் அரைசதம் விளாச, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. தவான் (57), ஸ்ரேயாஸ் (53) ரன்களும் சேர்த்தனர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் (41), உத்தப்பா (32), சாம்சன் (25) ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பான பந்துவீச்சினால், ராஜஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 9 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம், 6 வெற்றியுடன் டெல்லி அணி மீண்டும் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.