தொடர்ந்து நெருக்கடி… அவசர சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு… மாநில அரசுகளை ஒன்று திரட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Author: Babu Lakshmanan
1 June 2023, 6:28 pm

சென்னை ; மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக பாஜக ஆட்சியில்லாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, திமுக எம்.பி.-க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பின் 3 மாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அனைத்து மாநில முதலமைச்சர்களும் எதிர்க்க வேண்டும்.
மத்திய அரசு டெல்லி அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது, எனக் கூறினார்.

  • Myna Nandhini's Career Struggles சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்த மைனா…என்னமா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா..புலம்பும் ரசிகர்கள்..!
  • Views: - 420

    0

    0