100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…!!

Author: Babu
24 July 2021, 8:41 pm
Delhi_Buses - updatenews360
Quick Share

டெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் தென்பட்ட மாநிலமாக இருந்த டெல்லியில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், படிப்படியாக கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு தளர்த்தி வருகிறது. இந்த நிலையில், 26ம் தேதி முதல் மேலும் பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அதன்படி, பேருந்துகள்‌ மற்றும்‌ மெட்ரோ ரயில்கள்‌ 100 சதவீத பயணிகளுடன்‌ இயங்கலாம்‌ என்றும், ஸ்பாக்கள்‌ சில நிபந்தனைகளுடன்‌ திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ மற்றும்‌ இறுதிச்‌ சடங்குகள்‌, ஊர்வலங்களில்‌ 100 பேரும், திரையரங்குகள்‌ மற்றும்‌ மல்டி பிளக்ஸ்‌ திரையரங்குகள்‌ 50 சதவீத இருக்கைகளுடன்‌ திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Views: - 194

0

0