பேரணியில் கலவரம் எப்படி… விளக்கம் சொல்லுங்க.. : விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ்!!

28 January 2021, 11:31 am
Quick Share

டெல்லி : டிராக்டர் பேரணியின் போது தடையை மீறி சென்றதால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பதிலளிக்குமாறு விவசாய சங்க தலைவர்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.

குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் அணிவகுப்பு, பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை மீறி, காவல்துறையினருடன் சண்டையிட்டு, வாகனங்களை கவிழ்த்து, கடும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் உச்சகட்டமாக செங்கோட்டையின் கோபுரங்களில் ஏறி அவர்களின் கொடியை ஏற்றி அடாவடியில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த பரவலான வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வேளாண் சங்க தலைவர்கள் ஒப்பந்தம் என்ற பெயரில் துரோகம் இழைத்ததாகவும், அவர்களே வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், டெல்லியில் போராட்ட பாதை ஒப்பந்த மீறலில் ஈடுபட்டதற்காக சன்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தலைவருக்கு விளக்கம் கேட்டு டெல்லி துணை காவல் ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வன்முறையில் ஈடுபட்ட மற்றும் காரணமாக இருந்த உங்கள் மீதும், உங்களின் கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பப்பட்டதுடன், 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0