‘இது சிஎஸ்கே தானா’..? பேட்டிங்கை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள் : முதலிடத்திற்கு முன்னேறிய டெல்லி..!

25 September 2020, 11:13 pm
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்த்த போது, தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ப்ரித்வி ஷா (64) அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த பாண்ட் (37), ஸ்ரேயாஸ் ஐயர் (26) ஆகியோரும் சிறப்பாக ஆட, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல தொடக்க வீரர்கள் சொதப்பினர். இதைத்தொடர்ந்து, தனி மனிதனாக போராடி வரும் டூபிளஸிஸ் (43) மட்டும் இந்தப் போட்டியிலும் வெற்றிக்காக போராடினார். கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை டெல்லி வீரர்கள் கோட்டை விட்ட நிலையிலும், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள சென்னை வீரர்கள் தவறினர்.

இதனால், அந்த அணியால் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தை பிடித்தது.

Views: - 7

0

0