சாதாரணக் ஒரு குடிமைப் பிரச்சினையை ஒரு உயிர் பறிபோகும் அளவிற்குக் கொண்டு சென்றிருப்பது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது என பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காட்டில் பெண் ஒருவர் பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட பெண் கோகிலாவின் உடல் நேற்று பல கட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா இன்று மேற்பனைக்காட்டில் அறந்த கோகிலாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அத்தோடு இந்த சம்பவம் குறித்து முழுமையாக கோகிலாவின்’ குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தகவர்களைக் கேட்டறிந்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் சிவா கூறியதாவது,
மேற்பனைக்காட்டில் நடந்தேறி இருப்பது மிகத் துயரமான சம்பவம், தொலைக்காட்சிகளில் பார்த்ததை விட நேரில் வந்து பார்ப்பது மிகவும் நெஞ்சை உளுக்கும் விதத்தில் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதியிடன் இருப்பதால் தான் அவர் வெளிநாட்டில் இருந்த போதிலும் எங்களை இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்கச் சொல்லி இருக்கிறார்.
சாதாரண ஒரு குடிமைப் பிரச்சனையில் காவல் துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தது ஒரு தவறான செயல், கமிஷனுக்காக திமுகவைச் சேர்ந்த எம். எம். குமார் என்பவர் காசை வாங்கிக்கொண்டு இந்த பிரச்சினையில் தலையிட்டால் காசு கிடைக்கும் என்பதற்காக ஒரு உயிரை பலி வாங்கியுள்ளார்.
அதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் இறந்த பெண் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இறந்தபோதும், ஆதாரங்கள் பல இருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
கோகிலாவின் தாலியை கழட்டி அவமானப்படுத்திய காரணத்திற்காக அவரின் உயிர் பறிபோயுள்ளது. நீதிபதி அவரது சொந்த ஜாமீனில் விடுவித்த போதும் கையெழுத்திட சென்ற போது அவரை புண்படுத்தும் விதத்தில் பேசியதில், மன உளைச்சலில் இருந்து உயிரை விட்டுள்ளார்.
இவ்வளவு நடந்த பிறகும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்த பிறகும் அவர்களை குறைந்தபட்சமாக பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்களை பணியிடமாற்றம் செய்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது. இதுவரை திமுகப் பிரமுகர் எம். எம். குமார் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை.
தற்கொலைக்கு தூண்டுதல், கொலைக்கு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்துறைக்கு தங்களது கோரிக்கை சம்மந்தப்பட்ட காவல்துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
கோகிலாவை மிகவும் சிரமப் படுத்தியவர்கள் தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக குறைந்தபட்சம் அவர்களை பணியிடை நீக்கம் செய்தாக வேண்டும். திமுக பிரமுகர் எம் எம் குமார் மீது உடனடியாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் வேண்டும்.
உடனடியாக அரசும் காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜகவின் சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் பிரச்சினையில் பாஜக கையில் வைத்து உரிய நீதி கிடைக்க அவர்களின் குடும்பத்தினருடன் பாஜக நிற்கும்.
பாஜக முழுமையாக நீதியைப் பெற்றுத் தரும். இறந்தவரின் குழந்தைகளின் படிப்புச் செலவை முழுமையாக பாஜக இளைஞரணி ஏற்றுக்கொள்ளும். அதற்கு மேற்பட்ட உதவிகளை பாஜக செய்து கொடுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தோடு என்றும் பாஜக உடன் நிற்கும்.
சாதாரண ஒரு குடிமைப் பிரச்சினையை இந்த அளவிற்குப் போக விட்டது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.