தேர்தல் நேரத்தில் வேல் எடுத்தாலும்.. வடக்கே ஆள் பிடித்தாலும் ஒன்னும் எடுபடாது : திமுகவை விளாசிய ஓபிஎஸ்…!!

30 January 2021, 7:09 pm
OPS - eps - updatenews360
Quick Share

தேர்தல் நேரத்தில் வேல் பிடித்து நாடகமாடினால் திமுகவினால் ஒன்றும் செய்ய முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- தினம் ஒரு நாடகத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். இது அனைத்தும் தேர்தலுக்காக மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனை மக்களும் அறிவார்கள். அதிமுகவுக்க மக்கள் சக்தியோடு, தெய்வத்தின் சத்தியும் உள்ளது.

கடவுளை இழிவுபடுத்துபவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே கடவுளுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். தேர்தலுக்காக வடக்கே ஆள் பிடித்தாலும், வேல்பிடித்தாலும், திமுக ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது, எனக் கூறினார்.

Views: - 0

0

0