‘சிங்கத்தின் குகையிலே வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது’ : திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்த ஓ.பி.எஸ்…!!

21 November 2020, 8:37 pm
OPS- Updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும், பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லையும் காணொளி காட்சி மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.

முன்னதாக, தொடக்கவுரை நிகழ்த்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அமித் ஷா நவீன காலத்தின் சாணக்கியர்மேலும் இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்,” என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்த சிங்கங்கள் அஇஅதிமுகவின் தொண்டர்கள். சிங்கத்தின் குகையிலே வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது. அஇஅதிமுக தொடர்ந்து 3-வது முறையும் வெற்றிக்கனியை பறிக்கும்; முத்திரை பதிக்கும்!,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 28

0

0