சங்கிகளை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. உதயநிதி போட்டோவை காலால் மிதித்த வீடியோ.. அவரே கொடுத்த பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2024, 2:38 pm

உதயநிதியின் புகைப்படங்களை காலால் மிதிக்கும் வீடியோவை பகிர்ந்து அவரே பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் பல இடங்களில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள ஒரு கோவில் வாசலில் உதயநிதியின் புகைப்படத்தை போட்டு அதனை மிதித்து பக்தர்கள் செல்வது போன்ற வீடியோ வைரலானது.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

இதையும் படியுங்க: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காவலர்… நக்சலைட்டுகளை தேடிச் சென்ற போது சோகம்!!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம் என பதிவிட்டுள்ளார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 265

    0

    0