பைக் பிரியர் தோனி ஓட்டிய 90’s பைக்; இணையத்தில் வைரலாகும் ரசிகரின் வீடியோ,..
Author: Sudha12 July 2024, 10:08 am
இந்திய கிரிக்கெட் அணியின் “தல” தோனி பைக்குகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தன்னுடைய கேரேஜில் 70-க்கும் மேற்பட்ட பைக்குகளை வைத்திருக்கிறார்.அதை பார்க்கும் அனைவரும் வியந்து போவார்கள்.சமீபத்தில் அவர் வித்தியாசமான பைக் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யமஹாவின் R1-Z பைக்கை ஓட்டுகிறார் தோனி.
இந்த வீடியோவை தோனியின் ரசிகர் படம் பிடித்திருக்கிறார்.ஹெல்மெட் அணிந்து செம்ம ஸ்டைல் ஆக சாலையில் வலம் வருகிறார் தோனி.
பலமுறை தோனி பைக் ஓட்டும் வீடியோக்கள் ரசிகர்களால் எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தனை முறையும் ஏதோவொரு யமஹா பைக்கையே அவர் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யமஹா RX100, யமஹா RD350 ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது யமஹா R1-Z. இன்னும் சொல்லப்போனால் தோனி RD350 பைக்கையே பல்வேறு வண்ணங்களில், பல்வேறு டிசைன்களில் கஸ்டமைஸ் செய்து வைத்திருக்கிறாராம்.
இப்போது வைரலாகி இருக்கும் வீடியோவில் தோனி ஓட்டும் யமஹா R1-Z பைக்கைப் பற்றி 2k கிட்ஸ் கேள்விப் பட்டிருக்க முடியாது.ஏனெனில் 1992-ம் ஆண்டே இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இது ஒரு 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட நேக்கட் ஸ்போர்ட்ஸ்பைக்.