தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வப்போது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஆர்கே நகர் திமுக எம்எல்ஏ சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி, சென்னை தண்டையார்பேட்டையில் எம்எல்ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்தாக குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியிருந்தது.
அந்த வீடியோவை சமூக செயற்பாட்டாளரான ஷாலின் மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, துப்புரவு பணியாளரை வெறும் கையால் சாக்கடையை அள்ள திமுக எம்எல்ஏ வற்புறுத்தியிருக்கிறார். இது மனித கழிவுகளை மனிதர்களையே அள்ள வைப்பதற்கு எதிரான சட்டத்தை மீறும் செய்ல் என்றும், இது புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, ஆனால் முதல்முறையாக பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் மாநில அரசோ அதனை கண்டுகொள்ளவில்லை என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
ஷாலின் மரியா லாரன்ஸின் இந்த ட்விட் வைரலான நிலையில் திமுக எம்எல்ஏ எபினேசர் அந்த குற்றச்சாட்டை மறுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது நியாமற்ற குற்றச்சாட்டு, துப்புரவு பணி மேற்கொள்ளும்படி கார்பரேஷன் ஊழியரை எம்எல்ஏ வற்புறுத்தினார் என்ற பதிவை திரும்ப பெறாவிடில் இது குறித்து புகார் கொடுக்க நேரிடும், என்னிடம் முழு வீடியோவும் உள்ளது. நான் அந்த ஊழியரிடம் பேசவே இல்லை, அது முதலில் சாக்கடை கழிவே இல்லை, அது குடிநீர் தேக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்தியில் எம்எல்ஏ வற்புறுத்தினாரா என இருக்கிறதா? பாதி எடிட் செய்யப்பட்ட செய்தியை வைத்து எப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவீர்கள்? கார்பரேஷன் JEஇடம் நீங்க செய்யலைனா நான் வேணா சுத்தம் பண்ணட்டுமா கைவிட்டு என்று தான் கூறினேன் என ஆர்கே நகர் எம்எல்ஏ எபினேசர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.